Thursday, October 15, 2009

கருப்பா ! சிவப்பா !

மனிதன் தன்னை நிறம் பார்த்து பிரித்து கொண்டான் சிவப்பு ,கறுப்பு என்று,
ஆனால் இவர்கள் அறியாதவர் போல்! கடவுள் கண்களுக்குள் கறுப்பையும் ,வெள்ளையும் சேர்த்து படைத்தான் என்று!!

பூக்களின் ஆசை

தொட்டியில் இட்டு வளர்த்த பூச்செடியில் பூக்களை காண ஏங்கினேன் அன்று !
அந்த பூக்களை சிலர் பறிக்கும் பொழுது அவைகள் அழுகும் ஓசையை உணர்ந்தேன் அன்று !
அந்த பூக்கள் எல்லாம் சிரித்து குலுங்கியது என்னவளின் கைப்பட்டு பறிக்கும் பொழுது! அன்று தான் உணர்ந்தேன்
இந்த பூக்களுக்கு இந்த மண்ணில் வாழ ஆசை இல்லை அந்த பெண்ணில் வாழ ஆசை என்று !!!

நதியின் ஆசை

நதி,கடலை சென்று சேர்வது மலையின் மீது கொண்ட கோவமா? இல்லை
கடலின் மீது கொண்ட காதலா?

இது ஒரு காரணமா !!!

நான் கருப்பாக இருந்த காரணத்தால் என் காதலை தூக்கி எறிந்தால்
பாவம் ! அவளுக்கு தெரியாது அவள் மனதும் ஓர் இருட்டு என்று.

ஒரு இலையின் சோகம்

"ஒரு காம்பில் இலையுடன் இருந்த மலர் வாடி விட்டது என்று தெரிந்ததும் அவள் கண்கள் கலங்கின!!!
பாவம்! அந்த காம்பில் இருந்த இலைகள் மட்டும் என்ன செய்தது!!!

வண்ணத்துபூச்சி

என்னவள் நடந்து சென்ற பாதையை ஒரு வண்ணத்துபூச்சி பூக்கள் என்று நினைத்து அவளை பின் தொடர்ந்தது ,என்னவள் மறைந்து போனால்!!
பாவம்! அந்த வண்ணத்துபூச்சி தன் இடத்தை மறந்து அலைந்து கொண்டு இருந்தது!

மின்விசிறியின் ஆசை!!!!!!!!

என்னவளை பற்றி ஒரு கவிதை சொல்கிறேன் கேளுங்கள் என்று சொன்னேன் என் நண்பர்களிடம்!!! அத்தருணத்தில் மின்சாரம் துண்டித்தது! என் நண்பர்கள் எல்லாம் என்னை நகைத்தார்கள்!!! .
பாவம்! அவர்களுக்கு தெரியாது அந்த மின்விசிறி கூட அவளை பற்றி கேட்க ஆசைப்பட்டு தான் அமைதிஆனது என்று!!!